மனைவியின் சிகிச்சைக்கு உதவி: முதல்வருக்கு இயக்குநர் விக்ரமன் நன்றி

உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் தனது மனைவியின் சிகிச்சைக்கு உதவிய முதலமைச்சருக்கு திரைப்பட இயக்குனர் விக்ரமன் நன்றி கூறினார்.
மனைவியின் சிகிச்சைக்கு உதவி: முதல்வருக்கு இயக்குநர் விக்ரமன் நன்றி

உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் தனது மனைவியின் சிகிச்சைக்கு உதவிய முதலமைச்சருக்கு திரைப்பட இயக்குனர் விக்ரமன் நன்றி கூறினார்.

இயக்குனர் விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியாவுக்கு தனியார் மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை செய்ததால் அவரின் இடுப்பின் கீழ் செயலிழந்து போனதாகவும், ஆகவே அவரது மனைவிக்கு உயர் சிகிச்சை அளித்து மீண்டும் குணம் அடைய முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதையடுத்து இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், அரசு மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் கொண்ட குழுவினரோடு, விக்ரமனின் மனைவியை பரிசோதித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் இயக்குனர் விக்ரமன், ஐந்தாண்டுகளுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் இடுப்பு வலி அதிகமாக இருந்த காரணத்தினால் தன் மனைவியை அங்கு சிகிச்சைக்காக அனுமதித்து பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சை செய்தது பலன் அளிக்காமல் அவரது இடுப்பில் கீழ் பாகம் அனைத்தும் செயலிழந்து போனது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது வேலையை கூட தனது மனைவியால் பார்த்துக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும் இது தனக்கு மிக மன வருத்தத்தை அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தனது மனைவிக்கு மருத்துவ உதவி செய்யுமாறு முதலமைச்சரிடம் தான் சந்தித்து உதவி கேட்டதாகவும் அதன் அடிப்படையில் முதல் அமைச்சர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரை இன்று எனது இல்லத்திற்கு வந்து சிறந்த மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் எனது மனைவியை பரிசோதித்தார்கள். எனது மனைவிக்கு உடல்நிலை குணமடைய சாத்தியம் உள்ளதாக நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள். தொடர்ந்து சிகிச்சை தருவதாக கூறியிருக்கிறார்கள். எனது வேண்டுகோளை ஏற்றி, உரிய நேரத்தில் உதவிய முதலமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

விக்ரமின் மனைவியை பரிசோதித்த ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜி கூறுகையில், விக்ரமன் அவரது மனைவிக்கு உடல்நிலை  நரம்பியல் ரீதியாக ஐந்தில் மூன்று பங்கு சீராக உள்ளதால் அவரை குணப்படுத்த அதிக வாய்ப்பு இருக்கின்றது, அவருக்கு உள்ள நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் இங்கு ஐந்து சிறந்த மருத்துவர்கள் கொண்ட குழுவினர் அவர்களை பரிசோதித்தோம். அதில் அவருக்கு பிசியோதெரபி மூலம் சிகிச்சை அளிப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் கண்டிப்பாக அவர் நல்ல குணமடைய வாய்ப்பு இருக்கிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com