தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தனி ஒருவன் கதை பிரபல தெலுங்கு நடிகருக்காக ஆரம்பிக்கப்பட்டது: இயக்குநர் மோகன் ராஜா 

இயக்குநர் மோகன் ராஜா நேர்காணல் ஒன்றில் தனி ஒருவன் படத்தின் கதை பிரபல தெலுங்கு நடிகருக்காக ஆரம்பிக்கப்பட்டதென கூறியுள்ளார். 

News image
Updated On :4 செப்டம்பர் 2023, 12:07 pm

DIN

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடிப்பில் உருவானப் படம் தனி ஒருவன். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தில் ஹரிஷ் உத்தமன், கனேஷ் வெங்கட் ராமன், தம்பி ராமையா, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருந்த இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

Story image

ஆகஸ்ட் 28ஆம் தேதியுடன் தனி ஒருவன் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்தது. அன்றைய நாளில் தனி ஒருவன் படத்தின் 2ஆம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 

Story image

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இயக்குநர் மோகன் ராஜா, “தெலுங்கு நடிகர் பிரபாஸ் என்னிடம் கதை கேட்டிருந்தார். அவருக்காக வைத்திருந்த ஐடியாதான் தனி ஒருவன். ஆனால் அவர் அந்த சமயத்தில் காதல் படங்களில் நடிப்பதாக இருந்தது. எனக்கும் விஜய்யுடன் வேலாயுதம் படம் இருந்ததால் பின்னர் பிரபாஸுடன் இணைந்து பணியாற்ற முடியவில்லை. அந்த கதையைதான் பெரிதாக்கி தனி ஒருவன் படமாக்கினேன்” எனக் கூறியிருந்தார்.

Story image

தனி ஒருவன் 2 படப்பிடிப்பு 2024இல் தொடங்குமென சமீபத்தில் அறிவிப்பு விடியோ வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Story image

கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.