தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மலைக்கோட்டை வாலிபன்: வெளியானது முதல் பார்வை போஸ்டர், ரிலீஸ் தேதி! 

பிரபல மலையாள நடிகர் மோகன் லாலில் மலைக்கோட்டை வாலிபன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :18 செப்டம்பர் 2023, 3:10 pm

DIN

மலையாளத்தில் கலைபடங்கள், வித்தியாசமான படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி. இவரது ஜல்லிக்கட்டு படம் இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்திற்கு ‘மலைக்கோட்டை வாலிபன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மதுநீலகண்டன் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார்.  தீபு ஜோசப் எடிட்டிங் செய்கிறார். தேசிய விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர் சுஜித் சுதாகரன் இந்தப் படத்துக்கு காஷ்டியூம் டிசைனராக பணியாற்றி உள்ளார்.

இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசனை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. ராஜஸ்தானில் பிரமாண்டமாக படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் சில புகைப்படங்களை சமீபத்தில் பார்க்க முடிந்தது. 130 நாள்கள் நடைபெற்ற படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.  

Story image

இந்நிலையில் மலைக்கோட்டை வாலிபன் படத்தின் முதல் தோற்றப் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. 

Story image

அடுத்தாண்டு ஜனவரி 25ஆம் தேதி பான் இந்தியப் படமாக வெளியாகுமெனவும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.