
ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது.
மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி.
தற்போது, வேல்ஸ் இண்டர்நேஷ்னல் ஐசரி கணேஷன் தயாரிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: ’அமெரிக்காவிலும் இப்படியா பண்ணுவீங்க?’ பிரபல நடிகரின் ரசிகர்கள் அத்துமீறல்
இந்நிலையில் ’பி.டி. சார்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஹிப்ஹாப் ஆதி இதில் உடற்கல்வி ஆசிரியராக நடிக்கிறார்.