தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

விஜய் ஆண்டனிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி?

விஜய் ஆண்டனியின் முகத்தில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.

News image
Updated On :19 ஜனவரி 2023, 12:08 pm

DIN

விஜய் ஆண்டனியின் முகத்தில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன் 2 படத்தில் தற்போது நடித்து வருகிறார். இயக்கமும் அவரே தான். மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகளைப் படமாக்கியபோது ஏற்பட்ட படகு விபத்தில் விஜய் ஆண்டனிக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளார். இருப்பினும் முகத்தில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதால் அவருக்கு ஜெர்மனியில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.