
குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான மாஸ்டர் மகேந்திரன் லோகேஷின் இயக்கத்தில் விஜய், விஜய்சேதிபதி நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பினை கொடுத்தது.
இவரது பிறந்தநாளை முன்னிட்டு ‘ரிப்பப்பரி’ எனும் படத்தின் முதல் பாடல் வெளியானது. இந்நிலையில் இன்னுமொரு அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இவரது புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளார். ராகேஷ் மாதவன் எழுதி இயக்கியுள்ளார்.
எல்.எஸ். புரடக்ஸன்ஸ் தயாரிப்பில் மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் இந்தப் படத்திற்கு ‘நீலகண்டா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு- ஸ்ரவன் ஜி குமார், இசை - பிரசாந்த் பிஜி.
இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்தப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தியென பான் இந்தியப்படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...