ஜவான் திரைப்படத்தின் இசை உரிமம் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
தற்போது, இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்படம் செப்.7 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இதன் காரணமாக, இந்தாண்டின் மிகப்பெரிய படமாக ஜவான் உருவெடுத்துள்ளது.
இதையும் படிக்க: மாமன்னன் முதல்நாள் வசூல் இத்தனை கோடிகளா?
இந்நிலையில், இப்படத்தின் இசை உரிமத்தை டீ - சீரியஸ் நிறுவனம் ரூ.36 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷாருக்கான் நடிப்பில் இறுதியாக வெளியான ‘பதான்’ திரைப்படம் உலகளவில் ரூ.1,050 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.