விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

கணவரை பொம்மையாக செய்துகொண்ட சின்னத்திரை நடிகை!

இவர்களின் காதல் கதைகளும் அவ்வபோது நிகழ்ச்சிகளின் வாயிலாக ரசிகர்களுக்குத் தெரிவிக்கப்படுவதால், இந்த தம்பதிக்கும் ரசிகர்கள் ஏராளம். 

News image
Updated On :10 ஜூலை 2023, 5:42 pm IST

கணவரைப் பிரிந்து வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள சின்னத்திரை நடிகை, தனது கணவரின் உருவத்தை மார்பளவு பொம்மையாக செய்துகொண்டார். அதை தனது கணவருக்கு பரிசளிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் நடிகை மணிமேகலை. நேரலை நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான மணிமேகலை, நிகழ்ச்சி தொகுப்பாளராக பலரைக் கவர்ந்தார். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். இவர் உசேன் என்ற நடனக் கலைஞரை காதல் திருமணம் செய்துகொண்டார். 

சின்னத் திரையில் நட்சத்திர தம்பதிகளாக இவர்கள் அறியப்படுகின்றனர். இவர்களின் காதல் கதைகளும் அவ்வபோது நிகழ்ச்சிகளின் வாயிலாக ரசிகர்களுக்குத் தெரிவிக்கப்படுவதால், இந்த தம்பதிக்கு ரசிகர்கள் ஏராளம். 

தற்போது, நடிகை மணிமேகலை அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சமூக வலைதளங்கள் மூலம் அவ்வபோது ரசிகர்களுக்காக புகைப்படம் பதிவிடும் அவர், தனது அமெரிக்க பயண புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

தனது கணவருடன் பயணம் மேற்கொள்ளும் மணிமேகலை, இம்முறை தனித்து பயணம் சென்றுள்ளார். அமெரிக்க சாலையோர கடையில் உண்பது, சொகுசு கார்களின் பயணிப்பது போன்றவற்றை கடந்த சில நாள்களாக விடியோவாகவும் பதிவிட்டுவந்தார்.

Story image

அந்தவகையில், தனது கணவரின் புகைப்படத்தை சாலையோர கலைஞரிடம் கொடுத்து சிலையாக வடித்துக்கொண்டுள்ளார். புகைப்படம் சிலையாக உருவாகும் விடியோவைப் பகிர்ந்துள்ள மணிமேகலை, கணவர் இல்லாத குறையை சிலை செய்து தீர்த்துக்கொள்ளும் வகையில் விடியோ பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ''அமெரிக்கா டூ ஆண்டிப்பட்டி. உசேனின் சிரிப்பைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதனால் அவனை எனக்கு நானே பரிசளித்துக்கொண்டேன். லாஸ் ஏஞ்சலீஸில் உசேன் பொம்மை. வெளிநாடு சென்றாலும் உன்னை கூடவே வைத்து தொந்தரவு செய்வேன்'' என பதிவிட்டுள்ளார்.

மணிமேகலை கேலியாக பதிவிட்டுள்ள இந்த விடியோவிலும் கணவர் மீதான காதல் வெளிப்படுவதாக ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.