
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது அடுத்தப் படத்திற்காக தீவிரமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதையும் படிக்க: நான் எதிர்பார்த்த ஆள் இவர்தான்: காதலை உறுதிப்படுத்திய தமன்னா!
இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகை கங்கனா ரணாவத். கதாநாயகர்களுக்கு இணையாக அவரது படங்கள் வசூலை வாரிக் குவித்து வருகின்றன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் அவருக்கு மத்திய அரசு சார்பாக பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் 2 தேசிய விருதுகளை 2014,2015 ஆம் ஆண்டுகளில் பெற்றவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.
தமிழில் ‘தாம் தூம்’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் தமிழில் ‘சந்திரமுகி - 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
முன்னாள் இந்திய பிரதமா் இந்திர காந்தி, கடந்த 1975-ஆம் ஆண்டு இந்தியாவில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினாா். அவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தை தயாரித்து, நடித்து முடித்துள்ளார் கங்கனா ரணாவத்.
தற்போது தனது புதிய படத்திற்காக மீண்டும் தீவிரமாக உடற்பயிற்சியில் களமிறங்கியுள்ளார். எம்ர்ஜென்சி படத்திற்காக உடல் எடை கூடியிருந்த கங்கனா தற்போது தீயாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 6 மணி நேரத்தில் 3 இலட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமாக லைக்குகள் பெற்றுள்ளது.