லியோ படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடலில் புகைப்பிடித்தல் தொடர்பான எச்சரிக்கை வாசகம் இணைக்கப்பட்டுள்ளது.
நடிகா் விஜய் நடிப்பில் இயக்குநா் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படம், அக்டோபா் மாதம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகா் விஜய் பாடிய ‘நா ரெடி’ பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது.
அதில், போதைப் பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரெளடியிசத்தை உருவாக்கும் வகையிலும் பாடல் உருவாகியிருந்தது.
குறிப்பாக, பாடல் முழுவதும் நடிகர் விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சியும் இடம்பெற்றிருந்ததால் பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தது.
இந்நிலையில், இப்பாடலின் துவக்கத்தில் ‘புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் உயிரைக் கொல்லும்’ என்கிற எச்சரிக்கை வாசகத்தைப் படக்குழு இணைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










