‘கடவுள் தனது குழந்தையிடம் பேசுவது போல...’- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி! 

‘கடவுள் தனது குழந்தையிடம் பேசுவது போல...’- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி! 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தினை பகிர்ந்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். 
Published on

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ’லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. 

இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நாயகர்களாக நடிக்கின்றனர். இசை- ஏ.ஆர்.ரஹ்மான். கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியுள்ளது. இதனை சிறப்பு போஸ்டருடன்  அதிகாரபூர்வமாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது. 

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் படப்பிடிப்பின் புகைப்படங்களை பகிர்ந்து, “இது வெள்ளிக்கிழமை நடந்தது. காலையில் பழைய அம்மன் கோயிலில் படப்பிடிப்பு நடந்தது. இது எதிர்பாராத நிகழ்ச்சியாகக் கூட இருக்கலாம் அல்லது கடவுள் தனது குழந்தையிடம் தனக்கேயான சிறிய வழிகளில் பேசுவது போல நான் நினைக்கிறேன். எனது வேலையை நேசிக்கிறேன்” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்