நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்த ஸ்ரேயா ரெட்டி சாமுராய் என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
தொடர்ந்து திமிரு, வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம் போன்ற படங்களில் நடித்தார். திமிரு படத்தில் வில்லி வேடமேற்று ரசிகர்களை மிரட்டியிருப்பார். பிறகு விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். வழக்கம்போல் இவரும் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்தார். மாறாக கணவருடன் தயாரிப்பில் கவனம் செலுத்தினார்.

பின்னர், ஸ்ரேயா ரெட்டி ஐந்தாண்டுகள் கழித்து 2018 முதல் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்து வருகிறார். அறிமுக இயக்குனர் வேல் கூறிய கதை அவருக்கு பிடித்துவிடவே அதில் நாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் சுசீந்திரனிடம் உதவி இயக்குனராக வேல் பணியாற்றியுள்ளார்.
லியோ விஷன் படத்தை தயாரிக்க இதனை ஜே.எஸ்கே. வெளியிடுகிறது. இந்தப் படத்திற்கு ‘அண்டாவ காணோம்’ என்கிற வித்தியாசமான தலைப்பை சூட்டியிருக்கிறார்கள். படத்தின் நாயகனாக நடிப்பவர் தீபக். தேனி பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தின் கதை காணாமல் போன அண்டாவை சுற்றி பின்னப்பட்டுள்ளதாம்.

சலார் படத்தில்...
2018இல் எடுக்கப்பட்ட படம் பொருளாதார பிரச்னைகளால் தற்போதுதான் வெளியாகவிருக்கிறது. இந்த 6 ஆண்டுகளில் ஷ்ரேயா ரெட்டி தனக்கான ஒரு இடத்தை பிடித்துவிட்டார். சுழல் இணையத் தொடர், சலார் படத்திலும் நடித்து தனக்கான மார்க்கெட்டினை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அண்டாவ காணோம் திரைப்படம் வரும் ஜூனில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெலுங்கு தொடரில் நாயகியாக நடிக்கும் பரமேஸ்வரி ரெட்டி!
தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதை 21-ஆகக் குறைக்க வேண்டும்: ரேவந்த் ரெட்டி

ஓடிடியில் வெளியான யோகி பாபுவின் கெணத்த காணோம்!

3 மாதங்களுக்குப் பிறகு ஓடிடிக்கு வரும் யோகி பாபுவின் கெணத்த காணோம்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |





