தமிழில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் நடிகர் விகரமுக்கு மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் நல்ல திருப்பு முனையை அளித்தது.
ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடிப்பு பாராட்டப்பட்டதுடன் வசூலில் கலக்கிய பொன்னியின் செல்வனுக்குப் பிறகு பா.ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் விக்ரம். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
தொடர்ந்து, சித்தா படத்தை இயக்கிய சு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கிறார். சியான் - 62 என தற்காலிகமாக பெயரிட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

இன்று ஜெமினி திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் ஆகின்றன. சரண் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. பர்த்வாஜ் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் விக்ரம் தனது எக்ஸ் பக்கத்தில், “iன்று அன்பை பொழிந்த அனைவருக்கும் மிக்க நன்றி.. விருவிருப்பான அப்டேட் இன்னும் சில தினங்களில்.எதாவது யூகிக்க முடிகிறதா? ஓ போட மறந்து விடாதீர்கள்!” எனப் பதிவிட்டுள்ளார்.
அநேகமாக ஜெமினி படத்தின் மறுவெளியீடு எப்போது இருக்குமென அப்டேட் வெளியாகுமென ரசிகர்கள் கமெண்டுகளில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வைரலாகும் சியான் லுக்!

ராஜஸ்தான் ராயல்ஸால் எந்த ஒரு அணியையும் வீழ்த்த முடியும்: விக்ரம் ரத்தோர்

தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளுடன் பாடி மகிழ்ந்த விக்ரம்!

விக்ரமே எதிர்பார்க்காத வைரல்!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy





