உணவுப் பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி சாலையோரக் கடையில் சாப்பிட பயப்பட வேண்டாம்!வங்கிக் கணக்கை கொடுங்கள்; பணம் கொடுக்கிறோம் என்று சொன்னால்... ஆர்பிஐ எச்சரிக்கைஹிமாசலில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்!எஃப்சிஆர்ஏ சட்டத்தைத் திரும்பப் பெறுக: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்தவெக அரசு இன்று நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்காது: கனிமொழிதிமுக நிலைப்பாட்டை அறிய தவெகவுக்கு காங்கிரஸ் அழுத்தம்: அன்புமணிமுதல்வர் விஜய்க்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது: மாணிக்கம் தாகூர்பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்குரைஞர் திடீர் உயிரிழப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு: இன்றைய முழு நிலவரம்! தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலை?
/

குக் வித் கோமாளி சீசன் 5: ஒளிபரப்பு நேரம் அறிவிப்பு!

குக் வித் கோமாளி 5-வது சீசனின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2024, 1:11 pm IST

சமையல் நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பப்படுவதால் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி

இந்நிகழ்ச்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்கள் விரும்பிப் பார்க்கின்றனர். மேலும், இந்நிகழ்ச்சியை பார்ப்பதால் மன அழுத்தத்தை குறைகிறது என்றும் ரசிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது ஐந்தாவது சீசன் தொடங்குகிறது.

கடந்த 4 சீசன்களில் நடுவராக பங்கேற்ற சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகியதாக அறிவித்தார்.

இந்நிலையில் சமையல் கலைஞர்கள் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்கிறார்கள். இந்நிகழ்ச்சியை ரக்‌ஷன் மற்றும் மணிமேகலை ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள்.

இதில், கடந்த சீசன்களில் கோமாளிகளாகப் பங்கேற்ற, புகழ், சுனிதா, குரேஷி, மோனிஷா உள்ளிட்டோர் இந்த சீசனிலும் கோமாளிகளாகத் தொடருகின்றனர். மேலும், இந்தப் பட்டியலில் புதிதாக, விஜய் டிவி புகழ் ராமர், பிக்பாஸ் புகழ் கூல் சுரேஷ், காத்துக் கருப்பு கலை, சமூகவலைதளத்தில் நாற்காலிகள் விற்று பிரபலமான சிறுவன் சோஃபா ரசூல் ஆகியோர் இந்த சீசனில் கோமாளியாக பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குக்குகளாக திவ்யா துரைசாமி, வசந்த், பிரியங்கா தேஷ்பாண்டே, ஸ்ரீகாந்த் தேவா, இர்ஃபான், விடிவி கனேஷ், பிக் பாஸ் பிரபலங்கள் பூர்ணிமா ரவி, தினேஷ் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், குக் வித் கோமாளி 5-வது சீசன் நிகழ்ச்சி, வரும் ஏப். 27 ஆம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.