சமந்தாவின் புதிய படம்!

நடிகை சமந்தா நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சமந்தாவின் புதிய படம்!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் மார்க்கெட்டையும் கொண்ட நடிகை என்பதால், எப்போதும் பரபரப்பான நடிகை என்கிற பிம்பத்தில் இருப்பவர்.

ஆனால், மயோசிடிஸ் என்கிற தசை அழற்சி நோயால் பாதிப்பட்டவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பெரிதாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இறுதியாக, சாகுந்தலம் வெளியாகி சுமாரான வெற்றியைப் பெற்றது.

தற்போது, தொடர் சிகிச்சை மூலம் நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். இதன் காரணமாக, மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில், சமந்தா தன் சொந்த தயாரிப்பில் ‘மா இண்டி பங்காரம்’ என்கிற படத்தில் நடிக்க உள்ளதைப் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார். இயக்குநர் குறித்த தகவல் இடம்பெறவில்லை.

சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இந்தப் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளதால் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com