வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

நடிகை சமந்தாவிடம் உள்ள சொகுசுக்கார்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :29 ஏப்ரல் 2024, 7:54 am

DIN

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் மார்க்கெட்டையும் கொண்ட நடிகை என்பதால், எப்போதும் பரபரப்பான நடிகை என்கிற பிம்பத்தில் இருப்பவர்.

ஆனால், மயோசிடிஸ் என்கிற தசை அழற்சி நோயால் பாதிப்பட்டவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பெரிதாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இறுதியாக, சாகுந்தலம் வெளியாகி சுமாரான வெற்றியைப் பெற்றது.

Story image

தற்போது, தொடர் சிகிச்சை மூலம் நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். இதன் காரணமாக, மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார். முதல்முறை, தன் சொந்தத் தயாரிப்பில் ‘பங்காரம்’ என்கிற படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில், சமந்தா வைத்திருக்கும் சொகுசுக்கார்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, ரூ.3 கோடியிலான மெர்சிடஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி (Mercedes-Benz G63 amg) காரும், ரூ.2.25 கோடி கொண்ட லேண்ட் ரோவர் எவோக் (land rover range rover evoque) காரும், ரூ.1.75 கோடி மற்றும் ரூ.1.5 கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யு 7 சீரிஸ் (BMW 7 Series) காரும் போர்ஷ் கேமன் ஜிடிஎஸ் (porsche cayman gts) காரும் வைத்திருக்கிறார்.

Story image

இதுபோக, ரூ.87 லட்சத்தில் வாங்கிய ஆடி கியு 7 (Audi Q7) காரும் ரூ.70 லட்சம் மதிப்பிலான ஜாக்குவார் எக்ஸ் எஃப் (Jaguar XF) காரும் இருக்கிறதாம். ஒரு படத்திற்கு ரூ.4 கோடி சம்பளம் வாங்கும் சமந்தா மும்பை, ஹைதராபாத்தில் சொந்த வீடு வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.