லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.
நடிகர் விஜய் - இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
முன்னதாக, கோட் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
செப்.5 ஆம் தேதி கோட் படம் வெளியாக உள்ளதால், இப்படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
கோட் படத்தின் டிரைலர் இன்று (ஆக. 17) மாலை 5 மணிக்கு வெளியாகவிருக்கிறது. தற்போது இதன் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதில் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை நன்றாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
கோட் டிரைலர் 2 நிமிடம் 45 நொடிகள் இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
Roger that. Ready to explode from today 5 PM ð¥#TheGoatTrailer is releasing in 6 hours ð¥@actorvijay Sir
— Aishwarya Kalpathi (@aishkalpathi) August 17, 2024
A @vp_offl Hero
A @thisisysr Magical #TheGreatestOfAllTime#ThalapathyIsTheGOAT#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh @Ags_production@archanakalpathi⦠pic.twitter.com/1OOnfYMEYf
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











