நடிகர் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் நேற்று (ஆக.15) திரையரங்குகளில் வெளியாகியது. .
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படத்தில் நாயகனாக விக்ரம் நடித்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பிலிருந்த இப்படம் நேற்று உலகளவில் வெளியாகி்யது.
கோலார் தங்கச் சுரங்கம், தங்கத்துக்கு யார் சொந்தக்காரர்கள் என்று பூர்வகுடிகளின் கதைகளப் பற்றி பேசியுள்ளது தங்கலான்.
இந்தப் படத்தில் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி நடித்துள்ளார்கள்.
கலவையான விமர்சனங்களைப் பெறும் தங்கலான் முதல்நாளில் உலகம் முழுவதும் ரூ. 26. 44 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் புரமோஷனுக்காக சென்ற நடிகர் விக்ரம், “ எங்களுக்கு இந்தப் படத்தில் 100 பகங்கள்கூட எடுக்க முடியும். ஆனால், தங்கலான் உங்களுக்கு பிடிப்பதால் நீங்கள் காட்டும் அன்பிற்காக இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க எங்களுக்கும் ஆசை இருக்கிறது. இது குறித்து தயாரிப்பாளர் இயக்குநர் எல்லாம் கலந்துரையாடினோம். பா. ரஞ்சித் தனது அடுத்த பட வேலைகளெல்லாம் முடித்துவிட்டால் உடனே இது குறித்து பேசுவோம். அவர் அழைத்தால் உடனே சென்றுவிடுவேன்” எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
3 இடியட்ஸ் இரண்டாம் பாகம்: ஆமீர் கான்

விக்ரமே எதிர்பார்க்காத வைரல்!

ரியான் பராக்கின் பேட்டிங்கில் தவறில்லை, வலுவாக மீண்டு வருவார்: விக்ரம் ரத்தோர்
மீண்டும் இணையும் இருமுகன் கூட்டணி! விக்ரம் - 63 பட அறிவிப்பு!
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு




