12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

நடிப்பிலிருந்து ஓய்வு! பிரபல நடிகர் அறிவிப்பு!

நடிப்பிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார் பிரபல நடிகர்....

நடிகர் விக்ராந்த் மாஸே

Published On :

பிரபல பாலிவுட் நடிகர் சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

லூடேரா படத்தின் மூலம் 2013-ல் நடிகராக அறிமுகமானவர் விக்ராந்த் மாஸே. சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு, ‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ கவனம் பெற்றுத்தந்தது.

தொடர்ந்து, கின்னி வெட்ஸ் சன்னி, தில் ரூபா உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். கடந்தாண்டு வெளியான ‘12த் ஃபெயில்’ திரைப்படம் இவரின் திரைவாழ்க்கையையே மாற்றியது. இந்தியளவில் பெரிய வெற்றியைப் பதிவு செய்ததுடன் விக்ராந்த் மாஸே தன்னை சிறந்த நடிகராகவும் அடையாளப்படுத்திக் கொண்டார்.

விக்ராந்த் மாஸே

விக்ராந்த் மாஸே

இந்தாண்டில் செக்டர் - 36 படத்தில் சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றார். இறுதியாக, சபர்மதி ரிப்போர்ட் படத்தில் நடித்திருந்தார். தற்போது, இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், விக்ராந்த் மாஸே நடிப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Story image

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “ கடந்த சில ஆண்டுகள் சிறப்பாக இருந்தது. எனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி. ஆனால், ஒரு கணவனாக, தந்தையாக, மகனாக இப்போது வீட்டைக் கவனிக்க முடிவெடித்திருக்கிறேன். அடுத்தாண்டில் (2025) இறுதியாக ஒருமுறை நாம் சந்திப்போம். இறுதி 2 திரைப்படங்களும் பல ஆண்டுகளுக்கான நினைவுகளும்... மீண்டும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

விக்ராந்த் மாஸே

விக்ராந்த் மாஸே

விக்ராந்த் மாஸேவின் திரை வாழ்க்கை சூடு பிடித்திருக்கும் காலத்தில் அவர் இந்த முடிவை எடுத்தது திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. நடிகை ராஷி கன்னா உள்ளிட்டோர் முடிவை மாற்றுங்கள் என கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.