
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் உருவாகும் சத்ரபதி சிவாஜி படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
கன்னட நடிகராக சின்னச் சின்ன படங்களில் நடித்து வந்த ரிஷப் ஷெட்டி காந்தாரா திரைப்படத்திற்குப் பின் மிகப்பெரிய நட்சத்திர நடிகராக உருவெடுத்துள்ளார். அப்படத்தின் வணிகம் இந்தியா முழுவதும் அவரை பிரபலப்படுத்தியது.
தொடர்ந்து, காந்தாரா - 2 பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, ஹனுமன் - 2 மற்றும் பிரஷாந்த் நீல் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
இதையும் படிக்க: ரஜினி வசூலை முறியடித்த விஜய் சேதுபதி!
இந்த நிலையில், சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கைக் கதையாக உருவாகும் ’சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ படத்தில் சிவாஜியாக ரிஷப் ஷெட்டி நடிக்க உள்ளதை அறிவித்துள்ளனர்.
சந்தீப் சிங் இயக்கும் இப்படத்தின் முதல் அறிவிப்பு போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.
இப்படம் உலகளவில் 21.1.2027 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காந்தாரா படத்திற்குப் பின் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் ரிஷப் ஷெட்டி ஒப்பந்தமாகி வருவது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
ஏற்கனவே, நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் சத்ரபதி சிவாஜி வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.