தெலுங்கில் அறிமுகமாகும் பாபி தியோல்! 

தெலுங்கில் அறிமுகமாகும் பாபி தியோல்! 

பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். 


கடார் 2வில் பெரிய கமர்ஷியல் வெற்றி பெற்ற பிரபல நடிகர் சன்னி தியோலின் சகோதரான பாபி தியோல் அனிமல் படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார். இதனால் இந்தியா முழுவதும் பிரபலமானார். அவரது கதாபாத்திரம் வெகுவாக பாராட்டைப் பெற்றது.

தற்போது பாபி தியோல் தமிழிலும் அறிமுகமாகியுள்ளார். சூர்யா உடன் கங்குவா படத்திலும் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் அந்தப் படத்தில் இருந்து உதிரன் எனும் போஸ்டர் வெளியானது. அதில் பாபி தியோலின் புகைப்படம் அனைவரையும் கவர்ந்தது. 

இந்நிலையில் தெலுங்கில் அறிமுகமாகிறார் பாபி தியோல். நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 109வது (என்பிகே 109) படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் இந்தப் படத்தில் பாபி தியோலுடன் ஊர்வசி ரௌடேலாவும் தெலுங்கில் அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னமே வால்டர் வீரய்ய படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இதுதான் முதல் படமாக இருக்குமென அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com