நிஜ கண்ணூர் ஸ்குவாடுடன் மம்மூட்டி!

மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘கண்ணூர் ஸ்குவாட்’ திரைப்படம் பெரிய வெற்றிப் படமானது.
நிஜ கண்ணூர் ஸ்குவாடுடன் மம்மூட்டி!

மலையாளத்தில் கடந்த ஆண்டு செப்.28 ஆம் தேதி வெளியான திரைப்படம் கண்ணூர் ஸ்குவாட்.

ராபி வர்கீஸ் ராஜ் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் கிரைம் திரில்லர் பாணியில் உருவான இப்படம் ரசிகர்களைக் கவர்ந்தது.

தமிழில் வெளியான கார்த்தியின் தீரன் படத்தைப் போன்றே குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வடமாநிலம் செல்லும் காவல்துறைக் குழுவைப் பற்றியது கண்ணூர் ஸ்குவாட். நிஜத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவியே இது உருவானது.

மம்மூட்டி கம்பெனி தயாரித்த இப்படம் ரூ.100 கோடியை வசூலித்து அசத்தியது. இது, ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான பின் அதிக கவனத்தைப் பெற்றது.

நிஜ கண்ணூர் ஸ்குவாடுடன் மம்மூட்டி!
இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தற்போது, கண்ணூர் ஸ்குவாட் படம் உருவாகக் காரணமாக இருந்த நிஜ காவலர்களைப் படக்குழுவினர் சந்தித்துள்ளனர். கண்ணூர் ஸ்குவாட் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் மம்மூட்டி, அந்தக் காவலர்களை அழைத்து மரியாதை செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com