முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

நடிகர் 'அடடே' மனோகர் காலமானார்!

பிரபல நடிகர் அடடே மனோகர் உடல் நலக்குறைவால் காலமானார்.

News image
Updated On :28 பிப்ரவரி 2024, 9:17 am

DIN

சென்னையைச் சேர்ந்த நடிகர் மனோகர் சிறு வயது முதலே நாடகங்கள் மற்றும் சினிமா மீது பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். 3500க்கும் மேற்பட்ட முறை நாடகங்களில் நடித்தவர் 6 நாடகங்களை இயக்கினார். எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன் இயக்கிய நாடகங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர்.

1986 மற்றும் 1993-ஆம் ஆண்டில் அன்றைய தூர்தர்சன் (டிடி) தொலைக்காட்சியில் வெளியான 'அடடே மனோகர்’ என்ற இவரது நாடகங்கள் பெரிய வரவேற்பைப் பெற்றன.

நடிகர்கள் வடிவேலு, விவேக் உடன் நகைச்சுவைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றார். மேடைக்கலைஞராக இருந்து சின்னத்திரை, சினிமா என ஈடுபாட்டுடன் நடித்தும் வந்தார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு பாதிப்பில் இருந்த மனோகர் நேற்று (பிப்.27) இரவு சென்னையில் காலமானார். அவரின் மறைவுக்கு சினிமா வட்டாரத்தைச் சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.