நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பேட்ட பராக்.. ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் புதிய படம்?

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News image
Updated On :18 ஜூன் 2024, 4:48 pm IST

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் ரஜினி வேட்டையன் படத்தில் நடித்து முடித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க தயாராகியுள்ளார். படத்திற்குக் கூலி எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஜூலையில் படப்பிடிப்பு துவங்குகிறது.

அதேநேரம், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு அந்தமானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்பு, நடிகர் ரஜினியிடம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கதை ஒன்றைக் கூறினாராம். அது ரஜினிக்குப் பிடித்திருந்ததாம். ஆனால், லோகேஷ் கனகராஜின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதால் ரஜினி - 172 திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் வெளியான ‘பேட்ட’ திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் பல ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அப்படத்தில் இடம்பெற்ற பின்னணி இசைகளும், பாடல்களும் இன்றும் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.