காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

‘கண்மணி அன்போடு காதலன்..’ பாடலை இசையமைக்க இளையராஜாவுக்கு எவ்வளவு நேரமானது தெரியுமா?

மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படத்தால் கண்மணி அன்போடு காதலன் பாடல் வைரலாகி வருகிறது.

DOTCOM

Published On :

பறவ பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ளது மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம்.

இப்படத்தில் நடிகர்கள் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த பிப்.23 ஆம் தேதி வெளியான இப்படம் கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இணையாக டிக்கெட் விற்பனை நிகழ்ந்து வருவதால் இந்தாண்டின் வசூல் சாதனை படங்களில் ஒன்றாக மஞ்ஞுமல்பாய்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை உலகளவில் ரூ.50 கோடிக்கு அதிகமாக வசூலித்த இப்படம் விரைவில் ரூ.100 கோடியை வசூலிக்க உள்ளது.

Story image

தமிழகத்தில் இப்படம் வெற்றியடைந்ததற்குக் குணா படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடல் மிக முக்கியப் பங்காற்றியுள்ளது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய குணா படத்தின் இயக்குநர் சந்தான பாரதி, “மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் எனக்கு மிக பிடித்திருந்தது. இப்படத்தைப் பார்த்த கமலும் சில காட்சிகளில் நெகிழ்ந்துவிட்டதாகக் கூறினார். குறிப்பாக, கண்மணி அன்போடு காதலன் பாடல் வரிகளை கிளைமேக்ஸ் காட்சியில் பொருத்தியதில் புல்லரித்துவிட்டது. எத்தனையோ இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்திருக்கிறேன். ஆனால், இளையராஜா அண்ணனைப்போல் யாராலும் வேகமாக இசையமைக்க முடியாது. குணா படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் 2 மணிநேரத்தில் இசையமைத்தவர். அவரைப்போன்ற ஆள் யாரும் கிடையாது.” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.