ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!

நயன்தாராவின் பதிவினால் விக்னேஷ் சிவன் உடன் பிரச்னை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் தீயாக தகவல் பரவியது.

News image
Updated On :8 மார்ச் 2024, 11:16 am IST

நயன்தாராவின் பதிவினால் விக்னேஷ் சிவன் உடன் பிரச்னை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் தீயாக தகவல் பரவியது.

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் பிசியாக நடித்து வந்த நயன்தாரா, முதல்முறையாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் 1140 கோடி வசூலித்தது. 

தொடர்ந்து, அன்னபூரணி திரைப்படமும் சமீபத்தில் வெளியாகியது. மேலும், பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று பெற்றோர்களாகவும் இருக்கின்றனர்.

அவர்களது குழந்தைகளுக்கு உயிர், உலக் என வித்தியாசமாக பெயரிட்டுள்ளார்கள். 

நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் பதிவால் சர்சை எழுந்தது. நான் தொலைந்து விட்டேன் என்ற பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். முன்னதாக இன்ஸ்டாவில் பின் தொடர்வதை நிறுத்துவதாக சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது சமூக வலைதள கணக்கில் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டு, "நீண்ட நாள்களுக்குப் பிறகு எங்களது ஆண்களுடன் ஒரு பயணம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

விவாகரத்து சர்ச்சைக்கு இந்தப் பதிவு முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Story image

DOTCOM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.