மதுராந்தகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் முதல்வர் விஜய் பிரசாரம் தொடக்கம்!வண்டலூர் பள்ளி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! தாம்பரம் காவல்துறை விளக்கம்தவெக ஆட்சியில் பின்னோக்கிச் செல்லும் தமிழ்நாடு! மேயர் பிரியா உரைஞானேஷ் குமாருக்கு எதிராக அக். 2 முதல் போராட்டம்! அபிஜித் தீப்கே அறிவிப்பு!பள்ளியில் மாணவிக்கு கூட்டு வல்லுறவு! வசனம் பேசிய முதல்வர் எங்கே? உதயநிதி கேள்வி!இன்றுடன் காலாண்டுத் தேர்வுகள் நிறைவு! நாளைமுதல் விடுமுறைஜெம் வீரமணி வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து டிஜிபி உத்தரவு

‘விவரிக்க வார்த்தைகள் இல்லை..’: பிரபுதேவா

நடிகர் கமல்ஹாசன் நடன இயக்குநர் சுந்தரம் மாஸ்டருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

Published On :

நடிகர் கமல்ஹாசன் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பின், சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ஆக்‌ஷன் படமொன்றில் நடிக்கிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் மூத்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவை கௌரவிக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன் தன் அலுவலகத்தில் விழா ஒன்றை நடத்தினார். இதில், சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் உருவான ராஜ பார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கல் மதன காமராஜன், மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களை உருவாக்கிய விதம் குறித்துப் பேசப்பட்டது.

இந்நிகழ்வில், இயக்குநர் மணிரத்னம், ஒய்.ஜி.மகேந்திரன், வைரமுத்து, நடிகர் சித்தார்த், மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது, பிரபல நடன இயக்குரும் பிரபுதேவாவின் அப்பாவுமான சுந்தரம் மாஸ்டருடன் நடிகர் கமல்ஹாசன் ஒற்றைக் காலைத் தூக்கியபடி ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதைத் தன் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்த கமல், “அண்ணாத்தை ஆடுறார்.
அபூர்வ சிங்கீதம் , நிகழ்ச்சிக்கு வந்திருந்த திரு. சுந்திரம் மாஸ்டருடன் ஒத்தைகாலில் நின்று ஒரு ஃபோட்டோ எடுத்துக்கொண்டேன்.” எனக் கூறி புகைப்படத்தைப் பதிவிட்டார்.

இதைப் பார்த்த, நடன இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா, “இதை விவரிக்க வார்த்தைகளே இல்லை.” என நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.