நடிகை ஸ்ருதிஹாசன் இயக்கும் ஆல்பத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள இனிமேல் பாடலின் டீசர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்கவுள்ளார். ரஜினி - 171 படமாக இது உருவாக உள்ளது. இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் இணைந்திருக்கும் போஸ்டரை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்தது.
இது என்னவென்று புரியாமல் இருந்த நிலையில், லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு ராஜ்கமல் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
அதன்படி, ’இனிமேல்’ என்கிற பெயரில் துவங்கும் பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன் இசையமைப்பதாகவும் அறிமுகம் லோகேஷ் கனகராஜ் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவிருந்த டீசர் சற்று காலதாமதாமாக வெளியாகியுள்ளது. மார்ச் 25ஆம் தேதி இதன் முழு பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

டிசி படப்பிடிப்பு நிறைவு!
மே வெளியீடாக டிசி!

கிண்டலுக்கு ஆளான லோகேஷ் கனகராஜ்!
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு



