அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக அறியப்பட்டார் விஜய் தேவரகொண்டா.
2019இல் தெலுங்கில் வெளியான ‘ஜெர்ஸி’ திரைப்படத்தின் இயக்குநர் கௌதம் தின்னானுரியின் படத்தில் இணைந்துள்ளார் விஜய் தேவரகொண்டா. இது அவரது 12ஆவது படம். நானி நடிப்பில் அனிருத் இசையில் வெளியான ஜெர்ஸி திரைப்படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
விஜய் தேவரகொண்டா 13ஆவது படமான ஃபேமலி ஸ்டார் சமீபத்தில் வெளியானது. இதனை பரசுராம் பெட்லா இயக்கியிருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனை தில் ராஜூ தயாரித்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும் தில் ராஜூ தயாரிப்பில் நடிக்கிறார். இதனை ரவி கிரண் கோலா இயக்குகிறார். இது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் 59-ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் முழு விவரம் மே-9ஆம் தேதி வெளியாகுமெனப் படக்குழு தெரிவித்துள்ளது.
A Larger-than-life "Rural Action Drama" is on the cards ð§¨#SVC59 will be @TheDeverakonda's Mass Endeavour
— Sri Venkateswara Creations (@SVC_official) May 4, 2024
X
A @storytellerkola's Vision ð¥
Produced by Raju - Shirish â¨
More Updates on 9th May, Stay tuned to @SVC_official pic.twitter.com/FVca4INOGC
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








