இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எல்சியுவின் இறுதிப்படம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்திற்குப் பின் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாகி வருகிறது.
இதுவரை, 5 படங்களை மட்டுமே இயக்கினாலும் லோகேஷ் உருவாக்கும் கதைகளின் மீது ரசிகர்களுக்கு பெரிய ஆர்வம் இருக்கிறது. சில விமர்சனங்களைச் சந்தித்தாலும் படத்தின் மேக்கிங் மற்றும் ஆக்சன் காட்சிகளின் வடிவமைப்பில் திறமையான இயக்குநர் என்றே கருதப்படுகிறார்.
இதையும் படிக்க: விஜய் - 69: வெளிநாட்டு உரிமத் தொகையில் சாதனை!
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ், “கூலி திரைப்படத்தை அடுத்தாண்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். தொடர்ந்து, கைதி - 2 மற்றும் ரோலக்ஸ் திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளேன். எல்சியுவின் (லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்) கடைசி படமாக விக்ரம் - 2 திரைப்படம் இருக்கும் என நினைக்கிறேன். விஜய் அண்ணா நடிப்பதிலிருந்து விலகும் முடிவை மாற்றினால் லியோ - 2 படத்தையும் எடுப்பேன்” எனத் தெரிவித்தார்.
விக்ரம் - 2 படத்துடன் எல்சியு முடிவடைகிற தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.