டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

மீண்டும் அஜித் - சிவா கூட்டணி..!

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் மீண்டும் நடிக்க உள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.

மீண்டும் இணைந்த அஜித் - சிவா கூட்டணி.

Published On :

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் வீரம் (2014), வேதாளம் (2015), விவேகம் (2017), விஸ்வாசம் (2019) ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சூர்யாவை வைத்து இயக்குநர் சிவா இயக்கிய கங்குவா திரைப்படம் நேற்று வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இதன் இரண்டாம் பாகம் 2026இல் எடுக்கப்படுமென தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.

மேலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, “அடுத்ததாக கங்குவா 2 படம் அமையாது. அஜித்தின் அடுத்த படத்தினை சிவா இயக்கவுள்ளார். அந்தப் படம் முடிந்ததும் கங்குவா 2 படத்தை சிவா நிச்சயமாக இயக்குவார்” என்றார்.

சன் பிக்சர்ஸ் அஜித்தின் 64ஆவது படத்தை தயாரிக்க உள்ளதாகவும் 2025 இறுதிக்குள் இதன் படப்பிடிப்பு முடிவடையுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித் -சிவா கூட்டணியில் இது 5ஆவது படமென்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார். தனக்கு பிடித்த பைக் ரேஸிலும் அஜித் கலக்கி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.