நடிகர் மம்மூட்டி தன் அடுத்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.
நடிகர் மம்மூட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி தன் 7-வது படத்தை தயாரிக்கிறது. துல்கர் சல்மானின் ’குரூப்’ படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின் கே. ஜோஸ் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவிலில் துவங்கியுள்ளது.
இப்படத்தில், முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் விநாயகன் நடிக்கிறார். இக்கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகர்கள் ப்ருத்விராஜ், ஜோஜு ஜார்ஜிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், சில காரணங்களால் அவர்கள் விலக, விநாயகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஆச்சரியமாக, இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விநாயகனுக்கு வில்லனாக நடிகர் மம்மூட்டி நடிக்கிறாராம்.
புழு, பிரம்மயுகம் படத்தில் வில்லனாக நடித்து அசத்திய மம்மூட்டி, மீண்டும் வில்லனாக நடிக்கவுள்ள தகவல் கவனம் ஈர்த்துள்ளது.
மம்மூட்டி கௌதம் வாசுதேவன் திரைப்படத்தில் நடித்து முடித்ததுடன் இப்படத்தில் இணைந்துள்ளது அவரது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.