அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி படத்தின் பெயர் அறிவிப்பு!

நடிகர் மம்மூட்டியின் புதிய திரைப்படத்தின் தலைப்பு குறித்து...
A poster of the Adoor Gopalakrishnan - Mammootty film.
அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி படத்தின் போஸ்டர். படம்: எக்ஸ் / வேஃபேரர் பிலிம்ஸ்.
Updated on
1 min read

இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்கும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

துல்கர் சல்மான் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு பாதயாத்ரா (பாதயாத்திரை) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கலைப்படங்களை இயக்கி இந்தியளவில் பிரபலமானவர் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். இவர் இயக்கிய படங்களில் அனந்தரம், மதிலுகள், விதேயன் ஆகிய திரைப்படங்களில் நடிகர் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்ற அடூர் கோபாலகிருஷ்ணன் இறுதியாக 2016-ல் பின்னேயும் என்கிற மலையாள திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இவர்கள் 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்துள்ளது சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் திரையரங்குகளில் ஹிட் அடித்த மமூட்டியின் களம்காவல் ஜியோ ஸ்டார் ஓடிடியில் வெளியானது.

A poster of the Adoor Gopalakrishnan - Mammootty film.
எச்சரிக்கையுடன் அறிவிக்கப்பட்ட கராத்தே பாபு டீசர்!
Summary

Mammootty Adoor Gopalakrishnan film name Padayaatra announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com