பிரியங்கா மோகன் பங்கேற்ற நிகழ்ச்சியில் விபத்து..
பிரியங்கா மோகன் பங்கேற்ற நிகழ்ச்சியில் விபத்து..

மேடை சரிந்து விபத்து..! பிரியங்கா மோகனுக்கு என்னானது?

நடிகை பிரியங்கா மோகன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேடை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
Published on

நடிகை பிரியங்கா மோகன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேடை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

தெலுங்கில் கேஸ்டர் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன். தமிழில் டாக்டர் படத்தில் அசத்தினார்.

டான், கேப்டன் மில்லர் படங்களில் கவனம் பெற்றார். தற்போது ஜெயம் ரவியுடன் பிரதர் படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் அக்.31ஆம் தேதி வெளியாகிறது.

சரிப்பொதா சனிவாரம் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இன்னொரு தெலுங்கு படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.

இந்நிலையில், தெலங்கானாவில் வணிக வளாக திறப்பு நிகழ்வில் நடிகை பிரியங்கா மோகன் பங்கேற்றார். அதில் பேசிக்கொண்டு இருக்கும்போதே மேடை சரிந்து விழுந்தது.

அதில் இருந்த சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. நடிகை பிரியங்கா மோகன் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

தோரூரில் இன்று நான் கலந்துகொண்ட நிகழ்வில் விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக நான் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினேன் என்பதை எனது நலம்விரும்பிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விபத்தில் காயமுற்றவர்கள் விரைவில் நலமடைய வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன். எனக்கு அக்கறையாகவும் அன்பாகவும் குறுஞ்செய்திகள் அனுப்பிய அனைவருக்கும் எனது நன்றிகள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com