ரத்தன் டாடா தயாரித்த ஒரே திரைப்படம்... எது தெரியுமா?

ரத்தன் டாடா தயாரித்த திரைப்படம்...
ரத்தன் டாடா தயாரித்த ஒரே திரைப்படம்... எது தெரியுமா?
Published on
Updated on
1 min read

தொழிலதிபர் ரத்தன் டாடா ஒரே ஒரு பாலிவுட் படத்தை தயாரித்துள்ளார்.

தொழிலதிபர் ரத்தன் டாடா (86) மும்பை மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார்.

முதுமை தொடர்பான பல்வேறு பாதிப்புகள் காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை அவர் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை சீராக இல்லை என்று தகவல்கள் பரவிய நிலையில், புதன்கிழமை இரவு அவர் காலமானதாக டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் உறுதி செய்தார்.

அவரது மறைவுக்கு உலகளவிலுள்ள பல தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

டாடா குழுமத்தை பல தொழில்துறைகளுக்குள் கொண்டு வந்ததுடன் புதிய முயற்சிகளையும் செய்து அவற்றில் வெற்றியும் கண்டவர். ஆனால், ரத்தன் டாடா இறுதி வரை சினிமா தயாரிப்புத் துறைக்கு வரவில்லை.

காரணம், அவருக்கு சினிமாவைப் பார்ப்பதற்கான நேரமும் ஆவலும் இல்லையென்றே தெரிவித்துள்ளார். மேலும், பாலிவுட் சினிமா வன்முறையானது என்றும் மும்பையிலிருக்கும் உணவகங்களின் சிந்தனைகளைவிட (ஐடியா) பாலிவுட் சினிமாவுக்கு சிந்தனை தேவைப்படுகிறது என கூறியவர். ஆனால், இப்படியிருந்தவரே ஒரு பாலிவுட் திரைப்படத்தை தயாரித்தார் என்றால் நம்ப முடிகிறதா?

ரத்தன் டாடா தயாரித்த பாலிவுட் திரைப்படம்.
ரத்தன் டாடா தயாரித்த பாலிவுட் திரைப்படம்.

2004 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன், ஜான் ஆபிரஹாம், பிபாசா பாசு நடிப்பில் வெளியான ஆட்பார் (Aetbaar) திரைப்படத்தை தயாரித்தது ரத்தன் டாடாதான். இப்படத்தை விஜய் பட் இயக்கியிருந்தார். ரூ. 8 கோடி மதிப்பில் உருவான இப்படம் வணிக ரீதியான தோல்வியைச் சந்தித்தது. இதில், இணை தயாரிப்பாளராகவே ரத்தன் டாடா இருந்திருக்கிறார். என்ன காரணமோ, இப்படத்திற்குப் பின் எந்த படத்தையும் ரத்தன் டாடா தயாரிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com