கூலி படத்திற்கான நடிகர் ரஜினிகாந்த் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தின் முக்கிய அப்டேட்டாக கதாபாத்திர அறிமுகங்கள் குறித்து போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.
மலையாள நடிகர் சௌபின் சாகிர், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, நடிகை ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திராவின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளன.
இறுதியாக, நடிகர் ரஜினிகாந்தின் போஸ்டர் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கபட்ட நிலையில், தயாரிப்பு நிறுவனம் ரஜினியின் போஸ்டருக்கு முன், கூலியில் அவர் கதாபாத்திரத்தின் பெயர் என்ன? என ரசிகர்களிடம் கேள்வி கேட்ட கொஞ்ச நேரத்தில் ரஜினியின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
இப்படத்தில் தேவா என்கிற கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார்.