பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வேட்டையன் முதல் பாடலை பாடியது யார்?

மனசிலாயோ பாடல் அப்டேட்...

News image
Updated On :8 செப்டம்பர் 2024, 6:13 am

DIN

வேட்டையன் படத்தின் முதல் பாடல் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குநர் த.செ. ஞானவேல் ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்றார். தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

இதில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், அனிருத் இசையமைத்த இப்படத்தின் முதல் பாடலான ‘மனசிலாயோ’ பாடல் நாளை (செப்.9) வெளியாகிறது. அதற்கான கிளிம்ஸ் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

அதேநேரம், இப்பாடலைப் பாடியது யார்? என்கிற கேள்வியை தயாரிப்பு நிறுவனம் கேட்டுள்ளது. பாடலின் புரமோவைக் கேட்கும்போது மறைந்த பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் குரல்போல் இருக்கிறது.

Story image

பல ரஜினி படங்களுக்கு முதல் பாடலைப் பாடியவர் எஸ்.பி.பி. என்பதால் அந்த நினைவைத் தொடர வேட்டையன் படத்திலும் ஏஐ மூலம் அவர் குரலைப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.