நேற்று அரோகரா என தமிழில் பதிவு! இன்று படங்களை பகிர்ந்த பிரதமர் மோடி! பின்னணி என்ன?திருப்பரங்குன்றம் தூணில் தீபம்! வழிகாட்டுதல் குழுவில் ஆட்சியர்!திருப்பரங்குன்றத்தில் மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும்! நீதிபதிகள் அறிவிப்புதிடீரென அரோகரா என தமிழில் பதிவு! இன்று படங்களை பகிர்ந்த பிரதமர் மோடி! பின்னணி என்ன?தீபத்தூண் பகுதியில் இன்று யாருக்கும் அனுமதி இல்லை; நாளை வாருங்கள்! சிஆர்பிஎஃப் அதிகாரி வேண்டுகோள்பெரியார் அறிவுலக வழக்கு: அகல் விளக்கு உரிமையாளரை விசாரிக்க 3 நாள் போலீஸ் காவல்!தொகுதி மறுவரையறை மசோதா: கோரிக்கைகளை ஏற்றதால் திமுக ஆதரவு! மு.க. ஸ்டாலின் அறிவிப்புதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்! கொப்பரை வைத்து ஏற்ற திட்டம்!அனைத்து மாநிலங்களுக்கும் 50% உயர்வு: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு!நிதியின்றி தவிக்கும் போக்குவரத்துக் கழகம்! டயர்கள் இல்லாததால் முடங்கிய பேருந்துகள்: அன்புமணி குற்றச்சாட்டுமகளிர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!திருப்பரங்குன்றம்: பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் வருகை!தவெக ஆட்சியில் மூலதனச் செலவினம் 11% சரிவு! தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

13 ஆண்டு காதல்... சின்னத்திரை நாயகனுக்குத் திருமணம்!

வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரில் நடித்துவந்த நடிகர் அவினாஷ் தனது நீண்ட நாள் காதலியைத் திருமணம் செய்துகொண்டார்.

காதலி தெரசா மரிய ஜோசப் உடன் நடிகர் அவினாஷ் - இன்ஸ்டாகிராம்

Updated On :

வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரில் நடித்துவந்த நடிகர் அவினாஷ் தனது நீண்ட நாள் காதலியைத் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது.

அவினாஷின் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது. சின்னத்திரை பிரபலங்களும் ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் திரவியம் ராஜ்குமார் நாயகனாக நடிக்கிறார். ஈரமான ரோஜாவே தொடரைத் தொடர்ந்து, இத்தொடரில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதா சிவதாஸ் நடித்து வருகிறார்.

வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரில் நடிகர் அவினாஷ்

வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரில் நடிகர் அவினாஷ் - இன்ஸ்டாகிராம்

வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரில் கண்ணன் என்ற முக்கியமான பாத்திரத்தில் நடிகர் அவினாஷ் நடித்து வருகிறார்.

இவர் பாக்கியலட்சுமி தொடரில் அமிர்தா பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை அக்ஷிதாவின் அண்ணன் தான். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரிலும் கயலின் தம்பியாக அவினாஷ் நடித்திருந்தார். பின்னர் அத்தொடரில் இருந்து விலகிவிட்டார்.

துபையைச் சேர்ந்த இவர், தமிழில் பல்வேறு சின்னத் திரை தொடர்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகு என்ற தொடரின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதிப்போட்டியாளராக வெற்றி பெற்றார்.

இந்நிலையில் இவர் தனது 13 ஆண்டு கால காதலியை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். தெரசா மரிய ஜோசப் என்பவருடனான காதல் வாழ்க்கையை திருமண வாழ்க்கையாக மாற்றியுள்ளார்.

கிறிஸ்தவ முறைப்படி எளிமையாக நடைபெற்ற திருமணத்தில் நண்பர்கள், உறவினர்கள் கலந்துகொண்டனர். திருமணத்தின் புகைப்படங்களை நடிகர் அவினாஷ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நடிகர் அவினாஷ், ''3 ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு, இறுதியாக எங்கள் திருமணத்தை நடத்தி முடித்துள்ளோம். 13 ஆண்டுகால நட்பும் காதலும் அதிகாரப்பூர்வமாக இணைந்தது. கனவு நனவான தருணம் இது'' என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

புதுமண தம்பதிக்கு சின்னத்திரை நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.