இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி திருமணம்!

நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதரியும் திருமணம் செய்துகொண்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

News image
சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி
Updated On :16 செப்டம்பர் 2024, 7:00 am

DIN

நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதரியும் திருமணம் செய்துகொண்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் ‘பாய்ஸ்’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

சென்ற ஆண்டு வெளியான சித்தா படம் வெற்றிக்குப் பிறகு நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கவுள்ளதாகக் கூறியிருந்தார்.

சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி திருமணம்

சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி திருமணம்

இந்த நிலையில் நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதரியும் காதலில் இருப்பதாக செய்திகள் பரவியது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் இணைந்து பொது இடங்களில் தலைகாட்டத் தொடங்கினர்.

மேலும், இருவரும் தங்களுக்கு நிச்சயம் செய்யப்பட்டதை வெளிப்படையாகத் தெரிவிக்கும் விதமாக கடந்த மார்ச் 28 அன்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தனர்.

விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியிடுவோம் என்றும் கூறியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதரியும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயிலில் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு ரசிகர்களும் திரைத்துறையினரும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.