மெய்யழகன் திரைப்படம் கார்த்தியின் சிறந்த படமாக இருக்கும் என இயக்குநர் தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார்.
இந்தத் திரைப்படம் கார்த்தியின் 27-வது படமாகும். இப்படத்துக்கு 'மெய்யழகன்' எனப் பெயரிட்டுள்ளனர். இதன், டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. செப். 27 படம் திரைக்கு வருகிறது.
மையக் கதாபாத்திரங்களில் கார்த்தியும், அரவிந்த் சுவாமியும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய இயக்குநர் பிரேம் குமார், “மெய்யழகன் முழுக்க முழுக்க நடிப்பை மட்டுமே நம்பி உருவான திரைப்படம். நடிகர் கார்த்தி நன்றாக நடித்திருக்கிறார். இப்படம் அவரின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது, படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









