
திரைப்பட நடிகர் விஜய், அரசியல் கட்சித் தொடங்குவதாக அறிவித்து இன்று கட்சியின் பெயரையும் வெளியிட்டுள்ளார். அவரது கட்சிப் பெயர் தமிழக வெற்றி கழகம் என்பது எக்ஸ் பக்கத்தில் இன்று இந்திய அளவில் டிரெண்ட் ஆகியிருக்கிறது.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருக்கிறார். அவரது கட்சியின் பெயரை இன்று அறிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் என விஜய் கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அவரது ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க.. பூனம் பாண்டேவை பலிகொண்ட கருப்பை வாய் புற்றுநோய்: யாருக்கு வரும்?
இன்று முற்பகலில் விஜய் அரசியல் கட்சியின் பெயர் வெளியான நிலையில், இந்திய அளவில் எக்ஸ் பக்கத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற வார்த்தை டிரெண்டிங் ஆகிவருகிறது.
தொடர்ந்து, தளபதி, தலைவர் விஜய், முதல்வர் என்ற வார்த்தைகளும் தமிழக அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.
இதையும் படிக்க.. அரசியல் கட்சி தொடங்கிய விஜய்: வாழ்த்தி, வரவேற்ற அரசியல் பிரமுகர்
நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சித் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவரது அரசியல் கட்சி தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அவர் ஏற்கனவே அரசியலில் நுழைவதற்கான பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வந்த நிலையில், இன்று அரசியல் கட்சியின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க.. அரசியல் ஏன்? நடிகர் விஜய் விளக்கம்
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், என்னைப் பொறுத்தவரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல. அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்துகொள்ள எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்துத் தயார்ப்படுத்தி மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன்.
தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்ததும், கட்சியின் சின்னம், கொடி ஆகியவைற்றை வெளியிடவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக்கொடுத்துவிட்டு முழுமையாக அரசியலில் ஈடுபடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.