
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படத்தின் சென்சார் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இப்படத்தின் டிரைலர் ஆக. 2 ஆம் தேதி வெளியாகவுள்ளதால் அன்றிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துவிடும் என்பதால் பல திரையரங்க உரிமையாளர்கள் படத்தை வெளியிட முனைப்பு காட்டியுள்ளனர்.
கூலி திரைப்படம் 2.50 மணி நேரம் கால அளவு கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்திற்கான புரமோஷன்களை வித்தியாசமான முறையில் தயாரிப்பு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தணிக்கை வாரியம் கூலி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரஜினிகாந்த்தின் 50 ஆண்டுகால திரையுலக பயணத்தில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு ’ஏ’ சான்றிதழ் பெற்ற படமாக கூலி உருவாகியுள்ளது. கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான சிவா திரைப்படம் ரஜினியின் முதல் ’ஏ’ சான்றிதழ் பெற்றப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 71-ஆவது தேசிய விருதுகள்: பார்க்கிங் - சிறந்த தமிழ் படம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.