குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

காந்தாரி பட அனுபவம் பகிர்ந்த டாப்ஸி..!

நடிகை டாப்ஸி நடித்துவரும் காந்தாரி பட அனுபவம் குறித்து பதிவிட்டுள்ளார்.

News image

காந்தாரி பட அனுபவம் பகிர்ந்த டாப்ஸி - படங்கள்: இன்ஸ்டா / டாப்ஸி பன்னு

Updated On :5 பிப்ரவரி 2025, 9:21 pm IST

நடிகை டாப்ஸி நடித்துவரும் காந்தாரி பட அனுபவம் குறித்து பதிவிட்டுள்ளார்.

37 வயதான டாப்ஸி தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது ஹிந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர்.

அனுராக் கஷ்யப் இயக்கத்தில் உருவான ‘டோபாரா’படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டன்கி’ திரைப்படம் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்றன.

நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் கலக்கி வருகிறார் டாப்ஸி. தற்போது 3 ஹிந்தி படங்களில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காந்தாரி பட படப்பிடிப்பு புகைப்படங்களைப் பதிவிட்டு, “சூழ்நிலை கடினமாகும்போது, ​​வலிமையானவர்கள் சவாலை எதிர்கொள்ள கடினமாக உழைப்பார்கள். இந்த ஒற்றைவரிதான் காந்தாரி படம் எங்களுக்கு கற்றுக்கொடுத்த அனுபவமாகவும் உத்வேகமாகவும் இருக்கிறது.

படத்தின் கடைசி கட்டத்தை நோக்கி முன்னேறியுள்ளோம். அதனால் சீலிங் கண்ணாடியை உடைக்க தயாரானோம் (நிஜமாகவே உடைத்தோம்). ஏனெனில் நீங்கள் இதுவரை இல்லாத ஒன்றினை பெறவேண்டுமானால் இதுவரை செய்யாத ஒன்றினை செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கனிகா திலோன் எழுதியுள்ள காந்தாரி படத்தினை தேவாஷிஷ் மகிஜா இயக்கிவருகிறார்.

நெட்பிளிக்ஸில் வெளியான தில்ரூபா படத்தில் டாப்ஸியின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.