காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

சிம்பு - 49 படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்?

சிம்பு - 49 படத்தின் இசையமைப்பாளர் குறித்து...

Published On :

நடிகர் சிம்பு நடிக்கும் அவரது 49-வது படத்தின் இசையமைப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் 48வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை.

இதற்கிடையே, இயக்குநர் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் சிம்பு இணைந்தார். படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்தது.

தற்போது, பார்க்கிங் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தன் 49-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில், படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாய் அபயங்கர் இசையில் இன்னும் ஒரு படம்கூட வெளியாகாத நிலையில் சூர்யா - 45, பென்ஸ் ஆகிய படங்களுக்கு அவர் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.