ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

இதிலும் வெற்றி கிடைக்கட்டும்... அஜித்தை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!

அஜித் குறித்து சிவகார்த்திகேயன்...

News image
Updated On :11 ஜனவரி 2025, 7:16 am

DIN

கார் பந்தயத்தில் கலந்துகொள்ளும் நடிகர் அஜித்திற்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு வந்தார். இதற்காக, கடந்த ஆண்டே ’அஜித் குமார் ரேஸிங்’ என்கிற நிறுவனத்தை தொடங்கினார்.

தற்போது கார் பந்தயத்துக்கான பயிற்சியில் அஜித் குமார் ஈடுபட்டுள்ளார். இதற்காக துபையில் தனது ஃபெராரி காரில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

சில நாள்களுக்கு முன், பந்தயத்துக்கான பயிற்சியில் அஜித் ஈடுபட்டிருந்த போது, சாலை நடுவே இருந்த தடுப்பில் மோதியதில் அவரின் கார் நொறுங்கியது. இதில், காயமின்றி அஜித் உயிர் தப்பினார்.

அந்த விபத்துக்குப் பின்னர், அஜித் தற்போது முதல் முறையாக துபையின் 24 எச் ரேசிங்கில் பேட்டி ஒன்றை அளித்தார்.

அந்தப் பேட்டியில், “அடுத்த 9 மாதங்களுக்கு நான் எந்தப் படங்களிலும் நடிக்கப் போவதில்லை. வருகிற அக்டோபர் வரை படத்தில் நடக்க மாட்டேன். கார் பந்தயத்தில் அதிகம் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு போட்டியாளராக மட்டுமின்றி ஒரு உரிமையாளராகவும் கூறுகிறேன். அக்டோபருக்குப் பின்னர் மார்ச்க்கு இடைப்பட்ட காலங்களில் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன்.” எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், கார் ரேஸில் கலந்துகொள்ளும் அஜித்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “துபை ரேஸில் பங்கேற்கும் நடிகர் அஜித்துக்கு என் வாழ்த்துகள். உங்களின் தீவிர ஆர்வமும் அற்பணிப்பும் எப்போதும் எங்களுக்கு ஊக்கமளித்து வருகின்றன. இதிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.