பறந்து போ திரைப்படத்தின் வணிக ரீதியான வெற்றி , இனிமேல் நான் பேய்ப் படங்களையும் இயக்குவேன் எனக் கூறியுள்ளார்.
இயக்குநர் ராம் இயக்கத்தில் சிவா நடிப்பில் பறந்து போ திரைப்படம் நேற்று (ஜூலை 4)முதல் உலகம் முழுவதும் வெளியானது.
மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் இந்தப் படத்தின் வெற்றி அவரை நிறைய திரைப்படங்கள் எடுக்க வைக்கும் எனப் பேசினார்.
கோவை விமான நிலையத்தில் இயக்குனர் ராம் கோவையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இந்தப் படத்தின் கதை எழுதப்பட்டது கோவையில்தான். இங்குதான் முதல்நாள் படப்பிடிப்பும் நடந்தது. கோவை சுற்றுவட்டார பகுதியில் இந்தப் படம் எடுக்கப்பட்டு தற்போது வெற்றியாக உருவெடுத்து இருக்கிறது.
உலகம் முழுவதும் இந்தப் படம் வெற்றி அடைந்திருக்கிறது. இந்தப் படத்தை வெற்றிப்படமாக்கிய மக்களுக்கு நன்றி. புதிய முயற்சிகளை ஆதரித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு நன்றி.
கோவையால்தான் கலகலப்பான படத்தை என்னால் கொடுக்க முடிந்தது. எந்த நடிகர் வந்தாலும் அவருடைய பலம் கதையில் வர வேண்டும். அப்படித்தான் நடிகர் சிவாவை இதில் பயன்படுத்தி இருக்கின்றேன்.
நான்கு படம் தான் எடுத்திருக்கிறன், ஐந்தாவது படமாக பறந்து போ படத்தை எடுத்திருக்கிறோம். பேய்ப் படம் எல்லாம் இனிமேல் எடுப்போம். இனிமேல் படம் எடுப்பதற்கான இடைவெளி குறையும் என நினைக்கிறேன்.
"பறந்து போ" போல நிறைய படங்கள் செய்ய வேண்டும். வணிக ரீதியான பெரிய வெற்றி அந்தக் கதவுகளை திறந்து வைத்து இருக்கின்றது.
உண்மையில் குழந்தைகள் பெற்றொர்கள் சேர்த்து பார்க்கும் படமாகவும் வாழ்க்கையைக் கொண்டாட, பறந்து போ திரைப்படம் சொல்கின்றது எனவும் இயக்குனர் ராம் பேசினார்.
Summary
The commercial success of the film Parandhu Po has led him to say that from now on, he will also direct ghost films.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராம் சரணின் பெத்தி பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
ராஷ்டிரிய சரண்டர் சங்கம் ஆர்எஸ்எஸ்: ராகுல் விமர்சனம்

இயக்குநர் அட்லி - பிரியா தம்பதிக்கு பெண் குழந்தை!

9 மாத கடின உழைப்பு... கௌதம் ராம் கார்த்திக் பகிர்ந்த எடைக் குறைப்பு விடியோ!
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


