
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் தர்ஷனின் ‘சரண்டர்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமாக அறியப்படுபவர் நடிகர் தர்ஷன். இயக்குநர் கௌதமன் கணபதி இயக்கத்தில், தர்ஷன் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ”சரண்டர்”.
கிரைம் திரில்லர் கதைகளத்தில் உருவாகியுள்ள இந்தப் புதிய படத்தில், நடிகர் தர்ஷன் முதல்முறையாக காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பீட் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் புதிய படத்தில் நடிகர்கள் முனீஷ்காந்த், மன்சூர் அலிகான்; மலையாள நடிகர்கள் லால், சுஜீத் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: விவாகரத்தா? நயன்தாரா பதில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.