அமீர் கானுடனான திரைப்படம் உலகத்தரமாக இருக்கும்: லோகேஷ் கனகராஜ்

அமீர் கான் - லோகேஷ் கனகராஜ் திரைப்படம் குறித்து....
லோகேஷ் கனகராஜ், அமீர் கான்
லோகேஷ் கனகராஜ், அமீர் கான்
Published on
Updated on
1 min read

நடிகர் அமீர் கான் உடனான திரைப்படம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம், லியோ திரைப்படங்களுக்குப் பின் இந்தியளவில் கவனிக்கும் இயக்குநராக உருவெடுத்தார். தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை நாயகனாக வைத்து கூலி படத்தை உருவாக்கி வருகிறார். இதில், சிறப்பு கதாபாத்திரத்தில் நடிகர் அமீர் கான் நடித்துள்ளார்.

இப்படத்தைத் தொடர்ந்து, இந்தாண்டு டிசம்பர் மாதம் கைதி - 2 திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய லோகேஷ் கனகராஜ், “கூலி திரைப்படத்தில் நடிகர் அமீர் கானின் காட்சி குறைவாக இருந்தாலும் காத்திரமாக இருக்கும். இப்படத்தைத் தொடர்ந்து கைதி - 2 படத்தை இயக்குகிறேன். அதன்பின், விக்ரம் - 2, ரோலக்ஸ் என அடுத்தடுத்து வரிசையாக படங்கள் இருந்தாலும் கைதி - 2க்கு பின் நடிகர் அமீர் கானுடன் இணைவேன். அப்படம் இந்திய சினிமா என்கிற எல்லைத் தாண்டி உலகத்தரமான திரைப்படமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

director lokesh kanagaraj about his next collaborate movie with actor aamir khan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com