கமல் மன்னிப்புக் கேட்க 24 மணி நேரம் கெடு!

கமல் மன்னிப்புக் கேட்க 24 மணி நேரம் கெடு விதிப்பு தொடர்பாக...

கமல் ஹாசன் - ANI

Published On :2 ஜூன் 2025, 8:15 pm IST

கன்னட மொழி குறித்த நடிகர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையான நிலையில், கமல்ஹாசன் 24 மணி நேரத்துக்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம் கெடு விதித்துள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில், தமிழ் மொழியிலிருந்துதான் கன்னடம் பிறந்ததாக கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு கர்நாடக முதல்வா் சித்தராமையா உள்பட பல்வேறு கா்நாடக அமைப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அவா் மன்னிப்பு கேட்கும் வரை கா்நாடகத்தில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தை திரையிட அனுமதி கிடைக்காது என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் தக் லைஃப் படத்தின் பேனர்கள் கிழிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆனால் கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தப் பேச்சில் எந்தத் தவறும் இல்லை. இந்த விவகாரம் அரசியல் ஆக்கப்பட்டு வருகிறது. என்னுடைய அன்பு கா்நாடகம், ஆந்திரம், கேரள மக்களுக்குப் புரியும்.” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், கன்னட மொழி குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு 24 மணி நேரத்துக்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம் கெடு விதித்துள்ளது.

இது குறித்து கர்நாடக திரைப்பட வர்த்தக சங்க தலைவர் நரசிம்மலு கூறுகையில், “நாளை துபையில் இருந்து சென்னைக்கு கமல்ஹாசன் வரவுள்ள நிலையில், அவர் மன்னிப்புக் கேட்பதற்கான வாய்ப்பு குறைவு. இருந்தாலும் நாளை நண்பகல் 12 மணி மன்னிப்புக் கேட்க அவருக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. மன்னிப்புக் கேட்காவிட்டால் தக் லைஃப் படம் வெளியிடப்படாது.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.