விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கடவுள் வேடத்தில் சூர்யா?

சூர்யா - 45 திரைப்படம் குறித்து...

News image

சூர்யா

Updated On :16 ஜூன் 2025, 10:46 am

DIN

நடிகர் சூர்யா தன் 45-வது படத்தில் கடவுள் வேடத்தில் நடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

த்ரிஷா, சுவாசிகா என நடிகர்கள் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தில் இருப்பதால் விரைவில் வெளியீட்டு பணிகள் துவங்கும் எனத் தெரிகிறது.

இப்படத்திற்குக் கருப்பு எனப் பெயரிட்டுள்ளனராம். பெயர் டீசர் சூர்யாவின் பிறந்த நாளான ஜூன் 23 ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் சூர்யா வழக்கறிஞர் கதாபாத்திரத்திலும் கடவுள் வேடத்திலும் இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடவுள் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக மாறி வாதாடுவதுபோல் காட்சிகள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.